பார்வைகள்

Tuesday, July 10, 2012

திணைப்பெயர்ச்சி

டோல்கேட்
ஃப்ளை ஓவர்
ஃபோர்லான்
சர்வீஸ் ரோடு
மோட்டல்
பெட்ரோல் பங்க்
என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டே வருகிறாள் ஹேமா

நெல்லுவயல்
வாழத்தோப்பு
கம்மாயி
வெத்தலக் கொடிக்கால்
செவ்வந்தித் தோட்டம்
கமலைக் கிணறு
என்று சிறு வயதில்
என் விரல்வழி எண்ணிக்கையில் கடந்து வந்த
அதே சாலை வழிப் பயணத்தில்

2 comments:

  1. யதார்த்தமான வெளிப்பாடு. நன்று தொடரட்டும்..
    அப்படியே அந்த வோர்டு வெரிஃபிகேசனை எடுத்துடுங்களேன்.

    ReplyDelete
  2. மாற்றங்களால் யாவுமே மாறினாலும்
    மண் மாறுமா?

    ReplyDelete