பார்வைகள்

Wednesday, May 30, 2012

கடலுக்கு அப்பால் Beyond the Seaகடலுக்கு அப்பால் எங்கேயோ
பொன்னிற மணற் வெளிப் பரப்பில்
என் அன்பிற்குறியவள் எனக்காகக் காத்துக்கொண்டும்
ஓடும் படகுகளைப் பார்த்துகொண்டுமிருக்கிறாள்

 கடலுக்கு அப்பால் எங்கேயோ
என்னைக் கவனித்துக் கொண்டேயிருக்கிறாள்
பறவைகளைப்போல் உயரே பறக்க முடிந்திருந்தால்
நேராக அவள் கைகளில் அடைந்திருந்திருப்பேன் மிதந்தபடியே,.நட்சத்திரங்களுக்கு அப்பால் வெகு தொலைவிலும்
நிலவுக்கு அப்பால் வெகு அருகிலும் இருப்பவளிடத்தில்
சந்தேகத்திற்கப்பால் அறிவேன்.
என் இதயம் என்னைக் கொண்டு செல்லுமென்பதை

கரைகளுக்கப்பால் நாங்கள் சந்திப்போம்
முன்னெப்போதும்போலவே முத்தமிடுவோம்
கடலுக்கு அப்பால் நாங்கள் மகிழ்ந்திருப்போம்
இனியெப்போதும் பிரிந்தொரு பயணம் செய்திடேன்

சந்தேகத்திற்கப்பால் நானறிவேன்
என் இதயம் என்னை அங்கிட்டுச்செல்லும்
கரைகளுக்கப்பால் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்
முன்னெப்போதும் போலவே முத்தமிட்டுக் கொள்வோம்
கடல்களையும் தாண்டி நாங்கள் மகிழ்ந்திருப்போம்
இனியெப்போதும் பிரிந்துதொரு பயணம் செய்திடேன்


இனி பயணங்கள் இல்லை
மிக நீண்டதாய் பயணம் ஏதுமில்லையினி
போய்வருகிறேன், பிரியாவிடை நண்பனே
இனியெப்போதும் பயணமில்லை
மிக நீண்ட கடற்பயணம் இனி செல்வதற்கில்லை
இனியேதுமில்லை,
செல்கிறேன், இனியெப்போதும் பயணமில்லை.

Finding Nemo படத்தில் வரும் Some where Beyond the Sea  பாடலின் தமிழ் வடிவம். (முதல் முயற்சி).

2 comments:

  1. சந்தேகத்திற்கு அப்பால் உணர்வுகளின் கடல் கொந்தளிக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முதல் முயற்சி;முதல் வெற்றி.வாழ்த்துகள்

    ReplyDelete