பார்வைகள்

Sunday, December 18, 2011

தேவதைக் கதைகள்


இட்டிலியும் தோசையும் தின்றுகொண்டிருக்கிறது
பசித்த புலி-

தாயைத் தின்ற சிங்கத்தை
போலீசில் பிடித்துக் கொடுக்கிறது
குட்டி முயல்-

காக்கையிடம் ப்ளீஸ் சொல்லி
வடை வாங்கித் தின்கிறது நரி

ஆமையின் முதுகிலேறி
வலம் வருகிறது போட்டிக்கு வந்த முயல்

ஆக்டோபசுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன
டாமும் ஜெர்ரியும்....
*********************************
கதை சொன்ன களைப்பில்
தூங்க ஆரம்பிக்கிறது குழந்தை-
********************************
புதுக் கதைக்குள்
புகுந்து கொள்ளும் தங்களின் முறைக்காக
தலைமாட்டில் காத்திருக்க ஆரம்பிக்கின்றன
மற்ற விலங்குகளெல்லாம்!

1 comment:

  1. Thinking out of the box !!!
    அழகான கற்பனை. ரசித்தேன் வெகுவாக.
    பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete