பார்வைகள்

Sunday, December 18, 2011

வாக்குமூலம்உன் முழுப் பெயர் கூட தெரியாது - அப்போது!
***
நிதானித்து முகம் பார்த்ததில்லை ஒரு நாளும்
***
அழகாய்ப் புன்னகைப்பவர்கள் பட்டியலில்
எப்போதும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும்
உன் பெயர்
***
ஒரு விழாவின்போது
ஒலிபெருக்கியில் ஒலித்த
உன் குரலின் வலிமை கேட்டு
வியந்தது மட்டுமே
உன்னை பற்றி
மீளும் நினைவுகளின் நிகழ்வு
***
என்றாலும்
எதையோ இழந்து விட்ட வலியைத்
தருகிறது...
நிச்சயமான தற்செயலாய்
நாம் மிக அருகருகே நின்று கொண்டிருக்கும்
பழையதொரு புகைப்படம்-

No comments:

Post a Comment