பார்வைகள்

Friday, December 16, 2011

வெக்கக்கேடு

லச்சுமிக்குக் கல்யாணமாகி
அதாச்சு ஏழு வருஷம்

வருஷத்துக்கொரு பிள்ளையின்னு
அஞ்சு பிள்ளைகள் ஆணும் பொண்ணுமா

பத்தாயிரமும் பன்னண்டு சவரன் நகையும் பத்தலையாம்
வேலைவெட்டி இல்லாத அவ புருஷனுக்கு

வருஷம் தவறாம அடிச்சு மிதிச்சு அனுப்புறாரு
பவுனுக்கும், பணத்துக்கும்

இந்த வாட்டியும் அவளுக்காகவே
தயாரா இருக்குது....

அப்பன் வீட்டை அடகு வச்சு
வட்டிக்கு வாங்குன பணமும்
தர்மாஸ்பத்திரி பிரசவ வார்டுல
ஒரு கட்டிலும்-

4 comments:

 1. அருமையா இருக்கு

  ReplyDelete
 2. சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல கவிதை , நன்றிகள்

  ReplyDelete
 3. எவ்வலவு கொடுத்தாலும் பஓதாத பயலுகல என்ன செய்யலாம்?

  ReplyDelete
 4. நிதர்சனங்கள்.

  ReplyDelete