பார்வைகள்

Sunday, June 2, 2013

பழந்தின்னி

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்
இல்லை கசக்கும்
இல்லையில்லை துவர்க்கும்
இல்லவேயில்லை உவர்க்கும்
அதெல்லாம் இல்லை காரும்
இனித்தால் மட்டும் என்னவாம்?
நிறைந்து விடவா போகிறது?
இது ருசியான பழமில்லை
இந்தப் பழத்தில் ருசியே இல்லை
இது உன் பழம் இல்லை
இது பழமே இல்லை
நான் நரியும் இல்லை
அது சரி
எந்த நரி பழந்தின்னி?

No comments:

Post a Comment