பார்வைகள்

Thursday, May 30, 2013

விரல்கூத்து
விரல் தேடி விரலோடி
விரல் அடுக்கிக் கோர்க்கும்
பார்க்கும்

விரல் பார்த்து விரல் சேர்த்து
விரல் மடித்து எடுக்கும்
கொடுக்கும்

விரல் திருகி விரல் பிசைந்து
விரல் நீவி வருடும்
சொடுக்கும்

விரல் இறுக்கி விரல் வளைத்து
விரல் நெருக்கிச் சிலிர்க்கும்
கிளர்த்தும்

விரல் கிள்ளி விரல் பூசி
விரல் கோதிப் பொதியும்
களிக்கும்

No comments:

Post a Comment