பார்வைகள்

Thursday, May 30, 2013

அருகிலும் தொலைவிலும் அல்லாத ஓரிடத்தில் 
செல்வதும் வருவதுமல்லாத ஓர் நிலையில் 
நிற்பதும் நகர்வதுமாய் இருக்கிறோம்

என்ன சொல்ல? 
என்ன செய்ய? 
என்ன கேட்க?
என்ன நினைக்க?
என்னவென்றே தெரியாத போது!!!

’போ’ என்பதும் பின்பு ’வா’ என்பதுவுமாக போக்குக் காட்டுகிறது அன்பு.
போகவும் வரவும் இயலாததாய் முறைத்துக்கொண்டு நிற்கிறது பேரன்பு.

”வேண்டும்” என்பதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடிபிடித்து நியாயப்படுத்துகிற மனது ”வேண்டாம்” என்று மறுதலிக்க ஒரு காரணத்தைக்கூட தெரிவுசெய்வதில்லை. அவை லட்சலட்சமாய்க் குவிந்து கிடந்தாலும் கூட

உன் கருவிழியில் பளபளக்கிறது 
என் கனவு
உறங்காத கண்கள் உனது

சிறகசைத்துப் பறக்கிறது என் அன்பு
குறி தவறிய கவண்கல்லென உன் கோபம்

தொனியின் சிறு மாற்றத்தில் உடைந்து உதிர்கின்றது அன்பின் மீதான அத்தனை நம்பிக்கைகளும்

நம்மிடையே சொல்லிக் கொள்வதற்கு 
நிறைய இருக்கிறது
பகிர்ந்து கொள்ளத்தான் எதுவுமில்லை

உன் புன்னகை வலியாலும்
என் வலி புன்னகையாலும் 
நிரப்பப்பட்டிருக்கிறது
நம்மை நிரப்பிக் கொண்டிருக்கிறது 
நம் காதல்

சாத்தான் முத்தமிட்டது
தேவதையானேன்
உதடுகள் வலிப்பதாய் அலுத்துக்கொண்டது
சாத்தானானேன்











No comments:

Post a Comment