பார்வைகள்

Thursday, January 19, 2012

எலெக்ட்ரா என்றொரு பீர்பாலின் பூனை


எங்க............ ட்டச் சொல்லித்தாரேன்!
எங்க............ வாங்கித்தந்தது!
எங்க............ அடிப்பாங்க!
எங்க............வால முடியுமே!
எங்க............ தான் எல்லாரையும்விட சூப்பர்!
இந்தக் கோடிட்ட இடங்களையெல்லாம்
எப்போதும்
பெண்பாலைக் கொண்டே
நிரப்பிக்கொண்டிருக்கும் எலெக்ட்ராவை
நீங்களும் பார்த்திருக்கக் கூடும்

கடந்து போகும் காலடிகளைப்
பின் தொடர்ந்தோடித் தோற்று
மீண்டும் தொடர்ந்தோடித் தோற்றுக்கொண்டிருக்கும்
ஒற்றை நாய்க் குட்டியின் வாலாட்டுதலினும்
தீவிரமாயிருக்கிறது
மீசை வைத்த மற்றொரு தாய்மைக்கான
எலெக்ட்ராவின் தேடுதலின் ஆவல்

ஜி கே புக்கின்
"மை பேமிலி" பாடத்திலிருக்கும் உருவங்களிலொன்றின்
வெற்றிடத்தை நிரப்பும் முனைப்பிலிருக்கிறாள்
தீவிரத் தேடுதலில் கிடைத்தும் பொருந்தாத
அடுத்த வீட்டு
மாமா, தாத்தா, அண்ணன்
மற்றும் குட்டித் தம்பிகளைக் கொண்டு

தாய்ப் பாலுடன் கூடவே தேவையாயிருக்கிறது
இன்னுமொரு அன்புப் பால்
இன்னும் ருசித்தறிந்திராத அப்பாலுக்காக
எப்போதும் பசித்திருக்கும் எலெக்ட்ரா விற்குக்
கற்றுத்தரப்படுகிறது தனித்திருத்தலும் விழித்திருத்தலும்

மெல்ல மெல்ல
வளர்உருமாறிக் கொண்டிருக்கிறாள் எலெக்ட்ரா
பாலை வெறுத்தோடும் பீர்பாலின் பூனையாக
எதற்கும் எச்சரிக்கையை இருக்க வேண்டும்
நீங்களும் ஏலேக்ட்ராவும்

முளை விட ஆரம்பித்திருக்கும்
நகங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் எலெக்ட்ராவிற்குக்
கூறிய பற்களும் முளைத்து விடக்கூடும்!

எலெக்ட்ரா: கிரேக்கத் தொன்மத்தில் வரும் பெண். பெண் குழந்தைக்குத் தன் தந்தையின் மீது ஏற்படும் ஈர்ப்பு இவள் பெயராலேயே எலெக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்றழைக்கப்படுகிறது.

4 comments:

  1. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete