பார்வைகள்

Thursday, January 19, 2012

சிநேககாலம்


உன் வேலிகளை எல்லாம் இறுக்கி முடைகிறாய்
என் எல்லா வேலி முட்களையும் களவாடிக் கோர்த்து
சுற்றி வளைத்தும் பற்றிப் படர்ந்தும்
உயிர் உறிஞ்ச ஆரம்பிக்கின்றது
சிநேகம்.

குறுக்குப் பாதைகள் பல இருப்பினும்
உன்னைக் கடந்தே செல்கின்றன
வேண்டுமென்றே நான் தேர்ந்தெடுக்கும் சுற்றுச் சாலைகள்.
எப்போதும் புற வழிச்சாலைகளையே
தேர்ந்தெடுக்கிறாய் நீ.

நீ விரும்பாத போதும் உன் வெளிகளின் எல்லைக்குள்
எப்போதும் இருந்துகொண்டேயிருக்க நேர்கிறது
சுற்றுலாவின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தில்
முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும்
முகம் தெரியாத
யாரோ ஒருவர் போல.

1 comment: