பார்வைகள்

Sunday, December 18, 2011

காக்கை, நரி மற்றும் பாட்டிக்கான வடை

வடைகள் சுட்டுத் தர பாட்டி இல்லாத
வீட்டில் -
அவள் திவசத்துக்கு வாங்கிவைத்த
வடைகளைக் கண்டு
'பாட்டி வடை சுட்ட கதை'
நினைவுக்கு வருகிறது
குழந்தைக்கு

*************************************

காக்கைக்கும்
காக்கை மூலம் நரிக்கும்
கொடுப்பதற்கென்று
வடைகளில் ஒன்றைப்
பால்கனியில் வைத்து
காத்திருக்கிறது குழந்தை

***************************************

வெகுநேரம் காத்திருந்தும்
வராத காக்கைக்கென
வடையை
பிரிட்ஜில் பத்திரப் படுத்தும் குழந்தைக்கு-
இதுதான் நரியென்று காட்டுகிறாள் அம்மா
டிஸ்கவரி சேனலில் மேய்ந்து கொண்டிருக்கும்
ஓநாயை-

******************************************

நாளையேனும் காக்கை வருமென்ற
நம்பிக்கையில்
உறங்கச்செல்லும் குழந்தைக்கு மீண்டும்
சொல்லபடுகிறது...
பாட்டி வடை சுட்ட கதை...

*********************************************

அன்றைய கனவில்
காக்கையும் நரியும் பாட்டியும்
வடையைப் பங்கிட்டுத்
தின்றனர்.....
குழந்தைக்கும் கொஞ்சம்
பிட்டுக் கொடுத்து!

4 comments:

  1. அருமை.
    காகம் நரி வடை கதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க கூடாது என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்களே
    இது குறித்து உங்கள் கருத்து என்ன

    ReplyDelete
  2. இப்படி எளிமையாகப் புரியும்படி எழுதுவது தான் எங்களைப்பொறுத்தவரை கவிதை. புரியாத குறியீடுகளைக் கொண்டு கவிதை எழுதுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. இனிமேல் இப்படிப் புரியும்படி எழுதுங்களேன்.

    ReplyDelete
  3. பாட்டிகள் மரித்தாலும் என்றுமே மரிப்பதில்லை அவர்களின் கதைகளும்,வடைகளும்

    ReplyDelete
  4. யாருக்கும் ஏமாற்றமில்லாமல் "பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ".appadinnu பாட்டியும் வடையும் கதையை முடிசிட்டிங்க!.

    ReplyDelete