பார்வைகள்

Monday, December 19, 2011

குமட்டல்

நடுரோட்டில்
குடல் சிதறி
பல்லிளித்துப் பரப்பிக்கிடக்கும்
நாயின் நினைவுதான் வருகிறது-

காதலில் கசிந்துருகிக் கிடந்த
என்னை முகர்ந்து கொண்டே
நண்பனின் மனைவியை வருணித்த
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்.

2 comments: