பார்வைகள்

Saturday, December 17, 2011

துப்புரவு ஒழுகு

வெகு நாட்களுக்குப் பிந்தைய சந்திப்பிலும்
வழக்கம் போலவே நினைவூட்டினேன் உனக்கு
எங்கள் வீட்டுப் புழக்கடையிலிருந்து
உன் தாத்தா மலம் அள்ளிச்சென்றதாய்
என் தாத்தா சொன்னதை...
எங்கள் தெருவின் சாக்கடையை
உன் அப்பா சுத்தம் செய்ததை...
உன் சீருடையிலிருந்து
மலநாற்றம் வருவதாய்க்
கேலி செய்ததை...
வழக்கம் போலவே மௌனமாய் இருந்தாய்
வழக்கமான முறைத்த பார்வையுடன்
தற்போதைய நமது வேலை, தொழிலைப் பற்றி
கேட்டுக்கொள்ளவேயில்லை
நீயும் நானும்
நானும் மறந்தும் கூட சொல்லவில்லை...
அந்தப் பெருநகரத்தின்
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில்
இருக்கும் என் வீட்டின்
நான்கு கழிவறைகளையும் சுத்தம் செய்வது
நான்தான் என்பதை

1 comment:

 1. இல்லைங்க
  சென்னை அடுக்கு மாடிக் குடியிருப்புக்களிலும்
  குளியல் அறை துடைத்தல், துணி துவைத்தல்
  பணி செய்வது பம்மல் பாப்பம்மாளும், கூடுவாஞ்சேரி குப்பமாளின் மகளும் தான்.

  இல்லத்து அரசிகளான மாம்பலம் காயத்ரியோ, மந்தைவெளி பத்மாவோ அல்ல

  ReplyDelete