பார்வைகள்

Saturday, December 17, 2011

அன்புள்ள அப்பா

பிறவியிலேயே நடக்க வராது
அம்மா இல்லாத அழகான ஆனந்திக்கு...

அவள் அழ... அழ...
படிப்புக்கும் நடைப் பயிற்சிக்குமெனச் சொல்லி
அப்பா கொண்டு சேர்த்தார் - ஒரு
உண்டு உறைவிடப் பள்ளிக்கு!

பேச்சிலும் சிரிப்பிலும் படிபபிலுமென
எல்லார்க்கும் பிடித்தவளாகிப் போனாள்
குட்டி ஆனந்தி

ஒரு வருடமாகியும் வராத அப்பா
புது வீடு கட்டிகொண்டிருப்பதாய்ச்
சொல்லிச் சென்றார்
பரிதாபப்பட்டு பார்க்க வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி!

அப்பா கட்டிய புதுவீட்டுக்கு
'நடந்து' செல்வதாய்க் கனவு கண்டு
தூங்கிக்கொண்டிருக்கிறாள் ஆனந்தி...

கட்டிய புது வீட்டில்-
அடுத்த முதலிரவுக்குத்
தயாராகிக்கொண்டிருகிறார் ...
அப்பா!

1 comment:

  1. வெகு சில ஆண் விதவைகளே மறுமணம் செய்யாது இருக்கின்றனர்

    ReplyDelete