பார்வைகள்

Saturday, December 17, 2011

தொலைநிலைக் கலவி

எழுநிலை மாடத்துக் கடைநிலை அறையில்
இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் தனிமையில்
தலைவிக்கு வாய்த்திருக்கிறது...
அலைப்பேசி வழித் தொலை நிலைக் காமம்-
*********************
மறுமுனையில்
மடிக்கணினியில் உடல் திறந்த மாதொருத்தியின்
தயவால்
மடி நனைந்த தலைவன்-
*********************
இருவருக்கும் பொதுவான
இருள்வெளி எங்கும்
விரவிக்கிடக்கிறது....
வெற்றுக் கலவிகளின் வீச்சம்-
*********************
தொலைவுப் புணர்வுகளால்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருக்கும்
காம வெள்ளத்தின் கரையோரத்தில்
மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது...
ஸ்பரிசங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட
அன்பின் ஆத்மார்த்தம்-

2 comments: